Posts

செயற்றிட்ட கற்பித்தல் முறை (Action Learning Method)

          கற்பித்தல் முறைகளில் இன்று அதிகளவூ முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக செயற்றிட்ட முறையானது ( Action  Learning Method ) காணப்படுகின்றது. செயற்றிட்ட முறையானது ஏதாவது ஒரு பிரச்சினைக்கான தீர்வை செயற்பாடு முறையாக தேடிப்பெறுவதன் அடிப்படை பண்பாக இருக்கும். இவ் செயற்றிட்ட கற்பித்தல் முறையினை “கீல் பெற்றிக்” என்பவர் 1918ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். செயல்வழி கற்பித்தல் முறை என்பது ஒரு பிரச்சினையை இனங்கண்டு தீவூக்காகத் திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும் அதன் விளைவூகளை அறிதலும் ஆகிய செயன்முறைகளைக் கொண்ட சுழற்சிப்படிமுறையாகும். ( Kurt Lewin   1943). குறிப்பாக பார்த்தால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஒருவர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கருத்துள்ள செயற்றிட்ட செயற்பாட்டினை முன்னெடுப்பதாகும். இங்கு நோக்கமானது முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றதோடு கருத்துள்ள செயற்பாடாகவூம் அமைந்திருக்க வேண்டும்.            செயலும் ஆய்வூம் இணைக்கப்படும் போது செயல் என்பது ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட விசாரணையாகிறது. இதன் மூலம் நடைமுறையை விளங்கி விருத்தி செய்து சீர்திருத்துவதற்கு மேற்கொள்ளப்படும் தனிப்பட்ட ம